• Jan 18 2025

திடீரென மேடையில் பேச முடியாமல் கதறிய "நீயா நானா கோபிநாத்" ... என்னுடைய அப்பா எனக்கு வேண்டும் ....

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளராக வலம் வருபவர் கோபிநாத் சந்திரன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்" நீயா நானா "  விவாத நிகழ்ச்சியின்  தொகுப்பாளராக அறியப்படும் இவர் " நீயா நானா கோபிநாத்" என்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகினார். 


மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, சிகரம் தொட்ட மனிதர்கள் மற்றும் என் தேசம் போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு தொகுப்பாளராக இருந்தவர். இவருக்கு என்று  ஒரு தனி அடையாளத்தை கொடுத்த நிகழ்ச்சி என்றால் விஜய் டிவி " நீயா நானா " நிகழ்ச்சி மட்டுமே , இந் நிலையில் மேடை ஒன்றில்  தானும் சிரித்து பார்வையாளர்களையும் சிரிக்க வைத்து கொண்டிருந்த கோபிநாத் திடீர் என்று மேடையிலேயே   Emotional-ஆகி  அழுதுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. மேடையில் அவர் பேசியதை பார்க்கலாம் வாருங்கள் , 


" பிரதீப் தான் சொல்லுவான் நீ எல்லாம் மனுசனடா என்று கேட்டான் , நான் ஒரு நாளும் அழுததே இல்லை . பிரதீப் "நீயா நானா " நிகழ்ச்சிக்கு வருவான் , அவன் வருகிற நேரம் பார்த்து ஒரு  Emotional சீன் போகும் . அவன் போய்ட்டு கார்லயே அழுதிட்டு போயிருவான் . என்னுடைய ஷோ என்றும் போது வேற இவங்கள எல்லாம் ஒரு பெரிய மேடையில் ஏற்றி பார்க்க வேண்டும் என்று எனக்கு பெரிய ஆசை , என்னுடைய குடும்பம் எல்லாம் பார்த்து ரொம்ப நாள் , ரசிகர் சந்திப்பில் என்னுடைய குடும்பத்தையும் கூப்பிடத்துல ரொம்ப மகிழ்ச்சி . 


ஒரு மேடையை நாங்க அடைவதற்கு முன்பே எங்களை கொண்டாடுவது எங்களுடைய குடும்பம் தான் . என்னுடைய அப்பா மட்டும் தான் இல்லை , அப்பா மாதிரி இங்க இருக்கிறவங்க இருக்கும் போது எனக்கு ஆறுதல் தான் .என்னுடைய சித்தப்பாவை ஒரு நாள் விமானத்தில் கூட்டிட்டு போக வேண்டும் . அவருக்கு விமானம் என்றால் பயம் , நீ கூப்பிடு நான் வருகிறேன் என்றார் . இப்பிடி என்னுடைய குடும்பமே என்னுடைய நண்பர்கள் , உறவுகள் ரொம்ப முக்கியம் .


எனக்கு நிறைய சித்தப்பா, சித்தி இருக்கிறார்கள் நாங்க ஒரு பெரிய குடும்பம் நான் அப்பிடி ஒரு குடும்பத்தில் இருந்து வந்ததால் தான் என்னால் "நீயா நானா " நிகழ்ச்சி நடத்த முடிகிறது . இவ்வாறு பேசி கொண்டிருந்த இவர் தன்னுடைய குடும்ப கதையை கதைக்கும் போது திடீரென கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுள்ளார் . 





Advertisement

Advertisement