• Mar 26 2026

தவிடுபொடியான முத்துவின் வாழ்க்கை; சிட்டி காலில் விழும் நிலையில் முத்து? நட்புக்காக எடுத்த விபரீத முடிவு?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.  இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கார் செட்டுக்கு வந்த முத்து, அங்கிருந்த தனது நண்பர்கள் எல்லாரும் சோகமா இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என செல்வத்திடம் கேட்க, அந்த சிட்டி வந்தான், காசு கொடுக்கல என்றா கார் எல்லாத்தையும் தூக்கிட்டு போறேன்னு சொல்லி இருக்கான் என்று முத்து செல்வத்திடம் சொல்கிறார்.



இதை அடுத்து சிட்டியிடம் கதைக்க போன முத்து, என் கூட தான் உனக்கு  பிரச்சினை, அவங்கள விட்டுடு என சொல்ல, நீ என்னை எல்லார் முன்னாடியும்  அசிங்கப்படுத்திட்டா.. அதுக்கு நான் பதிலடி தர வேணாமா? நீ என் காலில் விழு.. உன் பிரெண்ட்ஸ் இருக்கிற பக்கமே நான் வரமாட்டேன் அப்படி என்று சிட்டி சொல்கிறார். அதற்கு முத்து ஒன்றும் பேசாமல் எழுந்து வருகிறார்.

இதை தொடர்ந்து, காரை தூக்க சிட்டியின் ஆட்கள் வர, அங்கு வந்த முத்து அவங்களின் பணத்தை கொடுத்து தன் நண்பர்களின் காரை மீட்கிறார்.

இதுல மூணு நாலு லட்சம் இருக்குமே எப்படி இவ்ளோ காசு கிடைச்சது என்று செல்வம் முத்துவிடம் கேட்க, அவர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் செல்கிறார்.

இவ்வாறு தனது காரை விற்று தனது நண்பர்களின் கடனை அடைந்துள்ளார் முத்து. இனி முத்துவின் வாழ்க்கை எவ்வாறு நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement