• Mar 10 2026

பஞ்சாயத்தில் வெளிறிப்போன சௌந்தர்யா முகம்.. மொத்தமா சோலிய முடிச்ச ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 42 நாட்கள் நிறைவுக்கு வந்து விட்டது. ஆனாலும் இந்த சீசன் சுவாரசியம் இல்லாமல் மிகவும் டல்லாக செல்கிறது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீசனின் ஆரம்பத்தில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசனுக்கு விஜய் சேதுபதி கோஸ்டாக களம் இறங்கி இருந்தார். எனினும் இதில் அதிகமாக விஜய் டிவியின் பிரபலங்கள் தான் புகுத்தப்பட்டதாக ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வந்தார்கள்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்த போதும் உள்ளே உள்ள போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்கவில்லை என மேலும் ஆறு வைல்ட் கார்ட் என்ட்ரிகளை உள்ளே அனுப்பினார்கள். ஆனாலும் அவர்கள் உள்ளே இருந்தவர்களை விட மோசமாக காணப்பட்டார்கள்.

d_i_a

இந்த நிலையில், இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.


அதன்படி, இன்றைய தினம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது. அதில் சௌந்தர்யா மீது சக போட்டியாளர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதனால் யார் யாருக்கு சௌந்தர்யா மீது கம்ளைண்ட் கொடுக்க வேண்டும் என விஜய் சேதுபதி கேட்க, எல்லாரும் கை உயர்த்துகின்றார்கள். இதனால் சௌந்தர்யா என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளார். இது தான் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோ.

Advertisement

Advertisement