• Jan 19 2025

தலைகீழான TRP ரேட்டிங்க்.. பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் இந்த சீசனை விஜய் சேதுபதி கையில் எடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்து பல விமர்சனங்கள் இருந்தது. உலகநாயகன் இடத்தில் விஜய் சேதுபதியா? அவர் இதனை சரியாக தொகுத்து வழங்குவாரா என்று பலரும் பல கேள்விகளை முன்வைத்தனர்.

ஆனாலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவது எபிசோட்டிலேயே தரமான பதிலடி கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. இதன் காரணத்தினால் விஜய் சேதுபதிக்கு பாராட்டு மழை பொழிந்தார்கள் ரசிகர்கள். அதன் பின்பு நாளடைவில் விஜய் சேதுபதி தொடர்பிலும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் எழுந்தன.  

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்குகள் அரைத்த மாவைவே அரைத்துக் கொண்டிருப்பதால் TRP ரேட்டிங்கிலும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பிக்பாஸ் தற்போது புதிய முடிவொன்றை எடுத்துள்ளாராம்.


அதாவது ரூபினா தலைமையிலான டீமை அனுப்பிவிட்டு அதற்கு பதிலாக அன்புக்கரசி தலைமையிலான கிரியேட்டிவ் டீமினை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் . இதில் இடம் பெற்ற டுவிஸ்ட் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 7க்கு அன்புக்கரசி டீம் தான் கிரியேட்டிவ் டீமாக வேலை செய்துள்ளனர். 

எனவே இவர்கள் வெளியே போறதை நினைத்து சந்தோஷப்படுகிறதா? இல்லை அவர்கள் உள்ளே வருவதை நினைத்து கவலைப்படுகின்றதா என்று தற்போது ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

Advertisement

Advertisement