நடிகர் நாக அர்ஜுனாவின் மகன் நாக சைத்தனியா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார். இதற்கான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு வீட்டார்கள் முன்னிலையில் நாக சைதன்யாவும் சோபிதாவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
நாக சைத்தன்யா ஏற்கனவே சமந்தாவை காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இவர்கள் பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில், தற்போது, சோபிதா நாகசைதன்யா திருமணம் முடிக்கவிருக்கும் நிலையில், இதுவும் தேறாது என்று சொல்லி இருக்கிறார் ஒரு ஜோதிடர்.
பிரபல ஜோதிடர் வேணு சுவாமி தனது கணிப்பை தெரிவித்தார். அதாவது இருவரும் 2027 இல் பரஸ்பரம் விலக வாய்ப்புள்ளதாக ஜோதிடர் வேணு சுவாமி கூறியிருந்தார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு வேண்டப்பட்டவர் பலர் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!