• Jan 19 2025

புதிதாக கண்டெண்ட் கொடுக்க பிக் பாஸ் சென்ற வைல்ட் கார்ட்ஸ்.. ஒருநாள் சம்பளம் எவ்வளவு?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் இந்த வாரம் வைக்கப்பட்ட பள்ளி பருவ டாஸ்க் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த டாஸ்கை பார்த்து பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது தான் மிச்சம். தற்போது நாமினேஷன் லிஸ்டில் ஆண்கள், பெண்கள் என சேர்த்து மொத்தமாக 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது யார் என்று ஒரே சஸ்பென்ஸ் ஆக உள்ளது. ரியா அல்லது ரஞ்சித் இருவரில் ஒருவர் தான் வெளியேறலாம் என்பது ரசிகர்கள் கணித்துள்ளார்கள்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஆறு வைல்ட் கார்ட்  போட்டியாளர்களின் சம்பள விபரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பிக் பாஸ் வீட்டில் சென்ற வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் சம்பளத்தை பார்ப்போம்.


ராயனுக்கு நாளொன்றுக்கு 15,000 சம்பளம் பேசப்பட்டு உள்ளதாம். சிவக்குமார், ராணவ், வர்ஷினி ஆகியோருக்கு 12,000 ரூபா நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படுகின்றதாம். மேலும் மஞ்சரி, ரியா இருவருக்கும் 10,000 சம்பளமாக அளிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பெரிதாக பிரபலம் ஆகவில்லை என்பதால் இந்த சம்பளத்தை பிக் பாஸ் கொடுத்து உள்ளது. மேலும் முதலில் வீட்டுக்குச் சென்ற போட்டியாளர்களின் ஆரம்ப சம்பளமே 15க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement