• Jan 18 2025

இதே தப்பத் தான் நீங்களும் உங்க புருஷனும் செஞ்சீங்க.. போட்டுத் தாக்கிய இயக்குனர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தான் தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டி உள்ளது. தன் மீது உள்ள கோபத்தினால் தான் தனுஷ் மூன்று நிமிட வீடியோவுக்கு 10 கோடி ரூபாய் கேட்கின்றார் என பரபரப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. தற்போது இந்த விடயம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதாவது நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இருவரும் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். இவர்களுடைய திருமணம்  ஆவணமாக வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் தனுஷ் தன் மீது உள்ள வெறுப்பு காரணமாக மூன்று நிமிட வீடியோக்கு 10 கோடி கேட்டதாகவும் இரண்டு வருடமாக இந்த ஆவணப்படம் வெளியிடுவதற்கு தடையாக இருந்ததாகவும் தனுஷ் மீது குற்றம் சாட்டி இருந்தார். விக்னேஷ் சிவனும் இதுதான் தனுஷ் கேட்ட 10 கோடி ரூபாய்காண வீடியோ இதை நீங்கள் இலவசமாகவே பாருங்கள் என்று இணையத்தில் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், இதே தவறைத்தான் நீங்களும் உங்கள் கணவர் விக்னேஷ் சிவனும் எல்ஐசி பட டைட்டிலில் செஞ்சீங்க என அதே தலைப்பில் ரெஜிஸ்டர் செய்து வைத்து போராடி வரும் இயக்குனர் எஸ். எஸ் குமரன் அறிக்கை உடன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இவருடைய அறிக்கையும் வைரலாகி வருகின்றது மேலும் நீங்களும் கடவுள் மன்றத்தில் பதில் சொல்லணும் என எஸ். எஸ் குமரன் வெளியிட்ட அறிக்கை வருமாறு,


Advertisement

Advertisement