• Aug 29 2024

எஸ்.ஜே.சூர்யா இல்லாத படமே இல்லையா? பிரபல நடிகரின் படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் எஸ்ஜே சூர்யா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் எஸ்ஜே சூர்யா அதிக படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஹீரோ மட்டும் இன்றி வில்லன் வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்த நிலையில் அவர் தற்போது ’ராயன்’, ‘கேம் சேஞ்சர்’ ’எல்ஐசி’ ’இந்தியன் 3’ ’வீரதீர சூரன்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

 இந்த நிலையில் தற்போது கார்த்தி நடித்து வரும் ’சர்தார் 2’ படத்திலும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த படத்தின் ஹீரோவையே டாமினேட் செய்து விடுவார் என்று கூறப்பட்டது.  அந்த வகையில் முதல் முதலாக கார்த்தியுடன் எஸ்ஜே சூர்யா நடித்த இருப்பதை அடுத்து  இந்த படத்தில் கார்த்தியை அவர் டாமினேட் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் எஸ்ஜே சூர்யா தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க இணைந்து வருவதை அடுத்து அவர் இல்லாத படமே இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement