• Sep 09 2024

"போட்" மொத்த கதையின் சாரத்தையும் ஒற்றை வரியில் சொன்ன சிவகுமார் !

Thisnugan / 3 weeks ago

Advertisement

Listen News!

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு மற்றும் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் "போட்" திரைப்படம் கடந்த 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.நேர்மறையான விமர்சங்களுடன் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வரும் "போட்" படத்தை பார்வையிட்ட பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Boat Tamil Movie Reviews, Photos, Videos (2024)

இந்நிலையில் "போட்" படத்தை பார்வையிட்ட தமிழின் மூத்த நடிகர் சிவகுமார் இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் படத்தின் கதையின் உள் அர்த்தத்தை செவ்வனே கண்டு பார்வையாளர்களுக்கும் தெரிவித்துள்ளார்.

Yogi Babu's survival thriller 'Boat' release date announced with a  hilarious teaser! - Tamil News - IndiaGlitz.com

"போட்" படத்தின் கதையின் சாரம் இன்றைய காலத்தில் மீனவர்களை சென்னையின் கரையோர பகுதிகளில் இருந்து  தூரே தள்ளி வைத்திருப்பது தான் என்றும் சென்னையின் பூர்வ ஆதிக்குடிகள் எப்போதும் மீனவர்கள் தான் என குறிப்பிட்டிருந்த சிவகுமார் சினிமா ஒரு பவர்புல் மீடியம் இப் படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் துணிச்சலாக படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement