• Jan 28 2026

SK மாதிரி ஆக இத பண்ணனும்! சிவகார்த்திகேயன் சொன்ன அட்வைஸ்! அமரன் ப்ரோமோஷன்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

படத்தின் புரொமோஷன் பணிகளை தொடங்கி பல்வேறு பக்கம் 'அமரன்' தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது `அமரன்' குழு. நேற்றைய தினம் மலேசியாவில் புரொமோஷன் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமரன் டீம் கலந்துகொண்டிருந்தனர். 


இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயனிடன் 'உங்களைப் போன்று படிபடியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் விஷயமென்ன ?' என்று தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றையும் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர், ``நானே வந்துட்டேன். நீங்க வரமாட்டீங்களா? நான் முதல்ல பெரிய தன்னம்பிக்கைக் கொண்டவன் இல்ல.


ரொம்ப பயப்படுவேன். முதல் முறை மேடையில ஏறும்போது ரொம்ப பயமாக இருக்கும். பயத்துல கை நடுங்கும். ஆனா எனக்குள்ள ஒரு ஆசை மட்டும் இருந்தது. எந்தவொரு விஷயத்தையும் கொஞ்சம் சரியாக பண்ணினால் போதும். தமிழ் மக்கள்கிட்ட நான் பார்த்துப் பிடிச்சு, வியந்து பார்க்கிற விஷயம் இதுதான்.


கொஞ்சம் முயற்சி பண்ணினால் போதும். அதுக்கப்புறம் அவங்க கைதட்டி நம்மள மேல தூக்கி விட்டுருவாங்க." எனப் பேசி கைதட்டல்களை அள்ளியிருக்கிறார் எஸ்.கே இதுமட்டுமல்ல, இந்த விழாவில் கமல்ஹாசனைப் போல மிம்க்ரி செய்தும் மேடையில் அசத்தியிருந்தார்.


Advertisement

Advertisement