• Oct 08 2024

CWC டைட்டில் வின்னர் பிரியங்கா! சர்ச்சைக்கு பின் மணிமேகலை போட்ட பதிவு! என்ன என்று பாருங்க!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இருந்து மணிமேகலை வெளியேறிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு காரணம் பிரியங்கா தான் என்ற தகவல் வெளிவந்தபின் இன்னும் பெரிதாக ஆனது. இதுகுறித்து மணிமேகலை தரப்பில் சிலரும், பிரியங்கா தரப்பில் சிலரும் பேசி வந்தனர். 


நேற்று நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 5ன் பைனல் போட்டியில் டைட்டிலை வென்றார் பிரியங்கா. பலரும் தங்களது வாழ்த்துக்களை பிரியங்காவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ளார் பிரியங்கா. அங்கிருந்து எடுத்த சில புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.


இதனையடுத்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கட்டிவரும் பண்ணை வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, "இந்த இடம் தான் தனக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் தருகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த இன்ஸராகிறேம் பதிவு... 




Advertisement