சமீபத்தில் வெளியாகிய அமரன் திரைப்படத்தின் பின்னர் சிவகார்த்திகேயனிற்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது அனைவரும் அறிந்ததே அதுமட்டுமல்லாமல் இவரது அமரன் திரைப்படமானது தமிழ்நாட்டில் 70-75 கோடி ஷேர் போயுள்ளதுடன் குறித்த தொகையானது தற்போது சிவகார்த்திகேயனின் சம்பள தொகையாக மாறியுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது விஜய் ,அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன அது மட்டுமன்றி எப்பொழுதும் விஜய்க்கு போட்டியாக அஜித் இருந்து வந்ததுடன் வெங்கட் பிரபு விஜய் கையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து சிவகார்த்திகேயன் கையில் எப்போது கொடுத்தாரோ அன்றிலிருந்து சிவா விற்கு அதிஷ்டம் கைகூடி வருகின்றது.
தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ள இவர் இன்னும் இரண்டு படங்களின் பின்னர் தனது சம்பளத்தினை 100 கோடி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.அஜித்தின் படம் இன்றுவரையில் தமிழ்நாட்டில் 60 கோடியினை தாண்டி சேர் போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!