சந்தியாவின் ஹால் டிக்கெட்டை வாங்கி சிவகாமி செய்த வேலை- உண்மை தெரியாமல் அலையும் சரவணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டுக்கு வந்த குடும்பத்தார் அனைவரும் அமர்ந்து சென்னையில் நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து இருப்பது கண்ணம்மாவுக்கு இட்டை குழந்தை பிறந்து அதில் பாரதியிடம் ஒரு குழந்தை கண்ணம்மாவிடம் ஒரு குழந்தை என அவர்களுக்கு தெரியாமல் வளர்ந்தது என பல ட்விஸ்டுகள் என பேசிக்கொண்டு இருக்க அப்போது ரவி சாமியார் விஷயம் பற்றி கேட்க மயிலு அவர் ஜெயிலில் இருக்கிறார் இந்த காலத்திற்கு வெளியே வர முடியாது என சொல்கிறார்.

அதன் பிறகு சரவணன் நல்ல வேலை கோச்சிங் கிளாஸ்க்கு எதுவும் பிரச்சனை இல்லை என சொல்ல சந்தியா கிளாஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சு இனி எக்ஸாம் தான் எழுத வேண்டும். வீட்டுக்கு ஹால்டிக்கெட் வரும் என சொல்கிறார். பிறகு எல்லோரும் எழுந்து ரூமுக்குள் சென்றுவிட சிவகாமி மட்டும் வெளியே உட்கார்ந்து இருக்க அப்போது போஸ்ட்மேன் சந்தியாவிற்கு போஸ்ட் வந்திருப்பதாக சொல்லி கொடுக்கிறார்.

இதை வாங்கிய சிவகாமி ஹால் டிக்கெட் என்பதை தெரிந்து கொண்டு அதை சந்தியாவிடம் கொடுக்காமல் மறைத்து விடுகிறார். அதன் பிறகு சந்தியாவும் சரவணனும் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய கிளாஸ்மேட் ஒருவர் போன் செய்து எக்ஸாமை நினைத்தால் பயமாக இருக்கிறது என பேசிக்கொண்டு இருக்க பேச்சுவாக்கில் ஹால் டிக்கெட் வந்துவிட்ட விஷயத்தை சொல்கிறார்.

பிறகு சந்தியா வெளியில் சென்று மயிலு உட்பட எல்லோரிடமும் கேட்க யாரும் ஹால் டிக்கெட் எதுவும் வரவில்லை என சொல்லி விடுகின்றனர். எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க ரவிக்கு சிவகாமி மீது சந்தேகம் வந்துவிடுகிறது. சரவணன் போஸ்ட் மேனிடம் கேட்டால் தெரிந்து விடும் என சொல்லி போஸ்ட் மானை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார். சரவணன் விசாரித்து விட்டு வருகிறேன் என கிளம்பி விடுகிறார்.பிறகு எல்லோரும் ரூமுக்குள் சென்றுவிட ரவிக்கு சிவகாமி மீது சந்தேகம் வந்ததால் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்லி உனக்கு இன்னும் சந்தியா மீது கோபம் குறையல போல என கேட்க சிவகாமி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்