• Jan 19 2025

ஜீவாவுக்காக வரிந்துகட்டி அவர் பக்கம் இருக்கும் முத்து..! அதிரடி திருப்பத்தில் நகருமா சிறகடிக்க ஆசை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது சன் டிவி சீரியலை பின்னுக்குத் தள்ளி TRP ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் கதைக்களம் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது 27 லட்சங்கள் உடன் கனடாவிற்கு ஓடிய ஜீவா தற்போது முத்துவின் காரிலேயே டிராவல் பண்ணுகிறார்.

இன்றைய தினம் ஒளிபரப்பான எபிசோட்டில் ரோகிணியின் பார்லருக்கு ஜீவா சென்ற நிலையில், அவர் அங்கு வசமாக மாட்டிக்  கொள்கிறார். மனோஜ் அங்கு வந்து அவரை விரட்டி பணத்தை கேட்கிறார். ஆனால் அவர் கொடுக்க முடியாது என்று சொல்ல போலீசுக்கு போன் போட்டு வர வைக்கிறார்கள்.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் ஜீவாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

எனவே இனிவரும் எபிசோட்டில் முத்துவின் காரில் ஜீவா சவாரி செய்ததால் ஜீவா பக்கம் முத்து நிப்பாரா? இல்லை தனது அண்ணனுக்காக அப்பாவின் காசை மீட்பதற்கு மனோஜ் பக்கம் நிற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement