அரச மரியாதையுடன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது- குஷியில் ரசிகர்கள்

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தான் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் ஜிம்மில் வேர்க்கவுட் செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் தனது 46 வயதில் திடீரென கடந்த அக்டோபர் 29-ம்தேதி மரணமானார். இவரது இறப்பு இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியடையச் செய்தது.

அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி நெறியாளர் என பல திறமைகளையும் கொண்டவர். இவரது மறைவுக்கு கோலிவுட் முன்னணி நடிகர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

மேலும் கடந்த நவம்பர் 1ம் தேதி புனித் ராஜ் குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.அரசு மரியாதையுடன் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளை பெற்றதோடு, சமுதாயத்திலும் கண் தானம், ஏழைகளுக்கு உதவுதல், இலவச பள்ளிக்கூடம், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் என அவரின் செயலால் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்