அப்போ இனிமேல் தமிழில் நடிக்க மாட்டாரா?- சமந்தா எடுத்த திடீர் முடிவால் கடும் சோகத்தில் அவரது ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாகசைத்தன்யாவைப் பிரிந்த பிறகு அதிக நேரம் வேர்க்கவுட் செய்வதிலும் தொடர்ந்து படங்களை தேர்வு செய்து நடித்து பிஸியான நடிகையாகவும் வலம் வருகின்றார்.

இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் குஷி திரைப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படம் எனக் கூறப்படுகின்றது.

இதனை அடுத்து பாலிவூட் சினிமாவில் பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் ரண்வீர் கபூர் அக்சய கமார் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கத் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதனால் இன்னும் சில காலம் பாலிவூட்டில் தான் நடிப்பராம்.

இந்த தகவல் தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு அப்போ இனிமேல் சமந்தா தமிழில் நடிக்க மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகியிருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்