16 வருடங்களுக்கு பிறகு முக்கிய அவதாரம் எடுக்கும் சிம்பு- மீண்டும் காதல் தானா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் வலம் வருகின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இவரது நடிப்பில் தற்பொழுது வெந்து தணிந்தது் காடு மற்றும் பத்துத் தல ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இதனை அடுத்து இயக்குநர் மிஷ்கின், ஏ. ஆர் முருகதாஸ் போன்றவர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இவரது இயக்கத்தில் இறுதியாக வல்லவன் திரைப்படம் வெளியாகியது.

இதனை அடுத்து 16 வருடங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளாராம். இதற்கான கதையையும் எழுது முடித்து விட்டாராம். இது காதல் படமாக இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இது பெரும்பாலும் அவருடைய 50வது படமாக இருக்கும் என்றும் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி அமைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்