வெற்றிக் கொண்டாட்டத்தில் ராஜா ராணி சீரியல் குழுவினர்- அடடே இதை ஆல்யா மிஸ் செய்திட்டாரே

இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ராஜா ராணி. இதன் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஆல்யா மானசா , சஞ்சீவ் இருவரும் இந்த சீரியல் மூலமே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

இதனை அடுத்து தொடங்கப்பட்ட இரண்டாவது சீசனிலும் ஆல்யா மானசா தான் கதாநாயகியாக நடித்து வந்தார்.இந்த முறை நடிகராக திருமணம் சீரியல் புகழ் சித்து களம் இறக்கப்பட்டார். ராஜா ராணி முதல் பாகத்தை போலவே ராஜா ராணி 2வும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதற்கு முக்கியமான காரணம் ஆல்யா மானசா. அதே போல் ஆல்யா – சித்து ஜோடியின் கெமிஸ்ட்ரி. இந்த சீரியலில் வெற்றிக்கு இவர்களின் நடிப்பு பிளஸ் ஆல்யா மற்றும் சித்துவின் ரொமான்ஸ் காட்சிகள் மிகப்பெரிய கன்டென்டு களமாக இருந்து வந்தது. டி. ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கில் இருந்தது.இப்படி சீரியல் வெற்றிப்பாதையில் சென்ற நேரத்தில் 2வது குழந்தைக்கு தாயாகி ஆல்யா சீரியலை விட்டு விலகினார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சந்தியாவாக அறிமுகம் ஆனார் ரியா. இவரின் நேர்த்தியான நடிப்பால் ராஜா ராணி தொடர் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதே போல் அர்ச்சனாவும் வில்லியாக பட்டையை கிளப்ப வழக்கம் போல் சீரியல் பரபரப்பாக ஒளிப்பரப்பாக தொடங்கியது.தற்போது ராஜா ராணி 2 சீரியல் 500 எபிசோடை தொட்டு வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ராஜா ராணி 2வின் 500 வது எபிசோடு கொண்டாட்டம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. ஏற்கெனவே இதற்கான ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்