• Jan 19 2025

ரூமில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட விஜயா.. பாய், தலையணையுடன் வெளியேற்றம்.. இனி தான் ஆட்டம் ஆரம்பமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த வாரத்திற்கான முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவில் விஜயா, அண்ணாமலைக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் போது, அதை வாங்க மறுத்த அண்ணாமலை அவரே தண்ணீரை எடுத்து குடிக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது மீனா ’அவர் தான் நகைக்கான பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாரே, 2 லட்சமும் கொடுத்துட்டாங்களே, பிரச்சனை எல்லாமே முடிந்துவிட்டதே’ என்று கூற அதற்கு அண்ணாமலை ’பிரச்சினை பணமில்ல, அவளுடைய குணம் தான்’ என்று கூறுகிறார்.



அப்போது பாய் தலையணையுடன் வெளியே வரும் விஜயா ’என்னால் யாரும் வெளியே தூங்க வேண்டாம், எனக்கு ரூமுக்கு குளிருது, நானே வெளியே படுத்துகிறேன்’ என்று கூறுகிறார். அப்போது மீனா ’நீங்களும் ரூமில் போய் படுத்துக்கோங்க அத்தை என்று விஜயாவிடம் சொல்ல ’நான் வெளியே வந்ததால் தான் அவர் வெளியில் ரூமுக்குள்ள போறாரு’ என்று ஆத்திரமாக கூறுகிறார்.

இந்த நிலையில் விஜயாவிடம் ரோகிணி வந்து ’அங்கிள் இடம் பேசுங்கள்’ என்று கூற அதற்கு கோபப்படும் விஜயா ’அவர்தான் என் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாரே, வெளியில் போனால் கூட என்னிடம் சொல்லி விட்டு போவதில்லை, மீனா  தான மகாராணி, இவ கிட்டத்தட்ட சொல்லிட்டு போறாரு’ என்று கூற மீண்டும் மீனா வருத்தத்துடன் பார்ப்பதுடன் இந்த முன்னோட்டம் வீடியோ முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement