• Sep 08 2024

இந்தியன் தாத்தாவுக்கே இந்த நிலைமையா? மொத்தமா காத்து வாங்கும் தியேட்டர்கள்! வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

உலகநாயகன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 12 ஆம் தேதி உலக அளவில் வெளியானது.

இந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இதில் சித்தார்த், எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, காஜல் அகர்வால்,  பாபி சிம்ஹா என பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ப்ரோமோஷன் படு மும்முரமாக நடத்தப்பட்டது. ஆனாலும் இந்த படம் ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு யாரும் இல்லாதது போல இருக்கை அனைத்தும் காலியாக உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அதாவது இந்தியன் 2 படம் பற்றி கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது திரையரங்குகளும் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement