• Jan 19 2025

சுந்தர் சி படத்தில் நடித்துள்ள ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் சிட்டி.. அபூர்வ புகைப்படங்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் சின்ன கேரக்டரில் நடிப்பவர்கள் கூட தங்கள் கேரக்டரை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் நடந்து வருகிறார்கள் என்பதும் அதனால்தான் அவர்கள் பிரபலமாகி வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. 

அந்த வகையில் இந்த சீரியலில் வில்லனாக, சிட்டி கேரக்டரில் நடித்து வரும் கார்த்திக் பிரபு என்பவர் தனது சமூக வலைதளத்தில் தான் சுந்தர் சி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

கடந்த ஆண்டு வெளியான ’தலைநகரம் 2’  என்ற திரைப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் சிட்டி, சுந்தர் சி நண்பராக நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் கூட அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் இந்த படத்தில் சுந்தர் சி உடன் தான் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் கார்த்திக் பிரபு பதிவு செய்துள்ளதை அடுத்து, ’சிறகடிக்க ஆசை’ செல்வம் கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் உள்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement