• Jun 06 2025

இறுதியாக நடக்க இருக்கும் இந்தியன் 2 இசைவெளியீட்டுவிழா! என்ன தேதி தெரியுமா?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த பாகம் என எடுப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே கடந்த காலத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டு சமீபத்தில் தயாராகியுள்ளது.


1996 இல் கமலகாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டு 24 வருடங்கள் கழித்து வெளியாக உள்ளது. குறித்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் புது அப்டேட் கிடைத்துள்ளது.


குறித்த படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்பு பின்தள்ளி போடப்பட்டது. இந்த நிலையிலேயே இதன் இசைவெளியீடு தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இதன் இசைவெளியீட்டு விழா வருகின்ற ஜூன் 1 ஆம் திகதி நடைபெறும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement