• Jan 19 2025

உண்மையை உளறிய பார்வதி.. விஜயா அதிர்ச்சி.. பிடிபட்டான் நகைத்திருடன்.. ‘சிறகடிக்க ஆசை’ ப்ரோமோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் தங்க நகை கவரிங் நகையாக மாறியது குறித்து விசாரணை நடந்து வந்ததாகவும் அதன் பின்னர் விஜயா அதிரடியாக மீனா மீதும், மீனா குடும்பத்தின் மீதும் பழியை தூக்கி போட்டதையும் பார்த்தோம். இதை அடுத்து முத்து மற்றும் மீனா ஆகிய இருவரும் நகை எப்படி மாறியது என்பதை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து ஸ்ருதியிடம் உதவி கேட்டதும் ஸ்ருதி மனோஜிடம் நைசாக பேசி உண்மையை வரவைக்கும் காட்சிகள் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நாளைய எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோவில் முத்து மற்றும் மீனா ஆகிய இருவரும் பார்வதியிடம் சென்று பேசுகின்றனர். அப்போது பாட்டியின் பிறந்தநாள் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது பாட்டிக்கு ரெட்டைவட செயின் பரிசாக அளிக்க வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார், ஆனால் அது முடியவில்லை என்று மீனா கூற, அப்போது முத்து மீனாவின் நகைகளை வைத்து தான் பாட்டிக்கு செயின் செய்ய ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என்று கூறினார்.



அப்போது பார்வதி ’மீனாவின் நகை தான் கவரிங் நகையே’ என்று உளர ’அது எப்படி உங்களுக்கு தெரியும்’ என்று முத்து மடக்குகிறார். கவரிங் நகை என்பது தனது வீட்டுக்கு மட்டும் தெரிந்த விஷயம் பார்வதிக்கு எப்படி தெரிந்தது என்று முத்து திடீரென கேட்டபோது, தான் உளறி விட்டோமோ என்பதை உணர்ந்த பார்வதி, உண்மையை கூறுவது போல் தெரிகிறது. அப்போது அங்கு வரும் விஜயா, ’பார்வதி’ என சத்தம் போட்டு அழைப்பதுடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து பார்வதி, முத்து-மீனாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறியிருக்கலாம் என்றும், நகைத்திருடன் மனோஜ் பிடிபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விஜயா அதையும் திசை திருப்ப முயற்சி செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement