• Jan 19 2025

சிறகடிக்கஆசை நடிகரின் இன்னொரு தொடர்.உடன் நடிக்கும் பிரபலங்கள்!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் முத்து-மீனா கதையின் நாயகன், நாயகியாக இருந்தாலும் இந்த சீரியலில் உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதே இந்த தொடரின் வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் வாரங்களிலும் இந்த சீரியலுக்கு முதலிடம் கிடைக்கும் என்றும் அந்த அளவுக்கு பார்வையாளர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் கூட பிரபலம் ஆகி உள்ள நிலையில் முத்து கேரக்டரின் நண்பர் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பன் இணையதளங்களில், சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிலையில் பழனியப்பன் தனது அடுத்த சீரியல் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். இயக்குனர் ரோஷன் என்பவர் இயக்கும் சீரியலில் தான் நடிக்க இருப்பதாகவும், இந்த சீரியலில் ’கவண்’, ’சார்பாட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்த பிரியதர்ஷினி மேடம் அவர்களுடன் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த சீரியலில் லொள்ளு சபா பிரேம பிரியா அவர்களும் இணைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் உங்கள் பார்வைக்கு இந்த சீரியல் வரும் என்றும் இந்த சீரியலில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த ரோஷன் அவர்களுக்கு எனது நன்றி என்றும் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பழனியப்பனின் இந்த பதிவு தற்போது  இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement