• Oct 13 2024

6 வருடங்கள் அரசியல் அனுபவமுள்ள கமல்ஹாசனை முந்திய விஜய்..! பரபரப்பான 2 பதிவுகள்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் ஆறு வருட அரசியல் அனுபவம் உள்ள கமல்ஹாசனுக்கு முன்பே இரங்கல் தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் மற்றும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

விஜய் பதிவு:


வயநாடு நிலச்சரிவு சோக செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன், எனது எண்ணம் பிரார்த்தனைகள் துயரம் அடைந்த குடும்பத்தினருடன் தான் உள்ளன, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்’

கமல்ஹாசன் பதிவு:

கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும்  நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தை புரிந்து கொண்டு நாம் அனைவருமே கூட்டாக செயலாற்ற வேண்டியது மிக அவசியம்.

ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப்பணிகளை துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement