• Jan 19 2025

நான் பெத்தது மூணும் இப்படி இருக்குதுங்களே.. விஜயா புலம்பும் அளவுக்கு என்ன நடந்தது? ப்ரமோ வீடியோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால் இந்த சீரியல் பார்வையாளர்களுக்கு விருப்பமான சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது டிஆர்பி ரேட்டிங்கிலும்  இந்த சீரியல் முன்னணி இடத்தில் உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அவ்வப்போது இந்த சீரியலின் முன்னோட்ட வீடியோ வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான முன்னோட்ட வீடியோவில் ஸ்ருதியின் காலை ரவி அமுக்கிக் கொண்டிருக்கிறார். அதை பார்க்கும் விஜயா அதிருப்தி அடைந்து ’நெயில் பாலிஷ் எல்லாம் நீயே போட்டுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்க அப்போது ஸ்ருதி, கணவர் கையால் போட்டு விடுவது தனி உணர்வு என்று கூற விஜயா அலுத்து கொண்டே போகிறார்.



அப்போது முத்துவின் கால்களுக்கு மீனா ஒத்தடம் கொடுத்து வரும் நிலையில், ரவியை அழைத்து வரும் விஜயா, மனைவியை எப்படி நடத்த வேண்டும் என முத்துவை பார்த்து கற்றுக் கொள் என்று கூறுகிறார். அப்போது ரவி நீங்களே பாருங்கள் என்று கூற, விஜயா பார்க்கும்போது மீனாவின் கையை முத்து அமுக்கி கொண்டிருக்கும் காட்சி உள்ளது. இதனை அடுத்து ரவி மனைவி மீது பாசமாக இருப்பவர்கள் இப்படிதான் இருப்பாங்க’ என்று கூறிவிட்டு செல்கிறார்.

அதன் பிறகு விஜயா ’நான் பெத்தது மூன்றும் இப்படி இருக்குதுங்களே’ என்று புலம்புவதுடன் இந்த முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement