• Jun 30 2024

நாளை விஜய் மாணவர்களுக்கு நடத்தும் பாராட்டு விழா.. இன்று திடீரென போலீசிடம் மனு.. என்ன நடக்குது?

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!


நாளை விஜய் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் இன்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த பாராட்டு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  மாணவ மாணவிகளுக்கும்,  இரண்டாம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஜூலை மூன்றாம் தேதியும் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முதல் கட்ட பாராட்டு விழா நாளை திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் என்ற இடத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்கும்படி திருவான்மியூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement