• Jan 18 2025

பலான படங்கள் எடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. என்ன நடக்குமோ?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக பலான படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த இயக்குனருடன் திடீரென விஜய் சேதுபதி ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தான் அவருடைய ஐம்பதாவது படமான ’மகாராஜா’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் வெற்றி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏஸ்’ திரைப்படம் மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ’ட்ரெயின்’ திரைப்படம் ஆகிய இரண்டும் விஜய் சேதுபதிக்கு வெற்றியை கொடுத்தால் அவர் உச்ச நடிகராக மாறிவிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் விஜய் சேதுபதியை ராம் கோபால் வர்மா சந்தித்தார் என்றும் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த சந்திப்பு நடந்துள்ளதாகவும் அதில் விஜய் சேதுபதிக்கு ராம் கோபால் வர்மா மூன்று மணி நேரம் கதை கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து விஜய் சேதுபதி மற்றும் ராமகோபால் வர்மா இணையும் படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பலான படங்களை மட்டுமே இயக்கிய ராம்கோபால் வர்மா, விஜய் சேதுபதியுடன் இணையவிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இந்த கதையை ராம்கோபால் வர்மா, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு கூறியதாகவும் ஆனால் அவரிடம் ராம்கோபால் வர்மா, கேட்ட தேதி இல்லை என்பதால் விஜய் சேதுபதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement