• Jan 19 2025

ரோகிணி பார்லருக்கு வந்து வசமாக சிக்கிய ஜீவா.. ரூ.27 லட்சம் கிடைச்சிருச்சா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோட் இறுதியில் மனோஜ் தொலைத்த 27 லட்ச ரூபாயை எப்படியாவது மீட்க வேண்டும் என்று ரோகிணி திட்டமிட்டு வருகிறார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்செயலாக 27 லட்சத்தை திருடி சென்ற ஜீவா, ரோகிணி இடம்  சிக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் ஆரம்பத்தில் ஜீவா என்ற பெண்ணை காதலித்த நிலையில் தந்தை அண்ணாமலை கொடுத்த 27 லட்ச ரூபாயை ஜீவாவிடம் கொடுத்து மனோஜ் ஏமாந்து விடுகிறார். மனோஜை தந்திரமாக ஏமாற்றி விட்டு கனடாவுக்கு ஜீவா சென்று விட்டதாக கதை சென்றது என்பது தெரிந்தது. 

இந்த நிலையில் அந்த 27 லட்ச ரூபாய் பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று ரோகிணி மற்றும் மனோஜ் திட்டமிடுகின்றனர். ஜீவாவின் புகைப்படத்தை துப்பறியும் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்து அவரை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஜீவா கிடைத்துவிட்டதாக கதையில் வரும் வகையில் இருப்பதாக தெரிகிறது. 



ஜீவா, ரோகிணி மற்றும் மனோஜ் ஆகியோர் ரோகிணி பார்லரில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானதில் இருந்து தற்செயலாக ஜீவா, ரோகிணி பார்லருக்கு வரும்போது ரோகிணி அவரை பிடித்து விடுவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மொத்தத்தில் ஜீவாவின் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து கதையில் மீண்டும் ஜீவா வர இருப்பதாகவும் கூறப்படுவதால் அந்த 27 லட்சம் ரோகிணிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஆனால் மனோஜ் இழந்த அந்த 27 லட்சம் அண்ணாமலையின் பணம் என்பதால் மனோஜ், முத்து, ரவி ஆகிய மூவருக்கும் சொந்தமானது என்பதால் பிரித்து தரப்படுமா? அல்லது ரோகிணி மட்டும் அந்த பணத்தை மொத்தமாக கைப்பற்றிக் கொள்ள சதி செய்வாரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மொத்தத்தில் ’சிறகடிக்க ஆசை’  சீரியலில் இன்னும் சில நாட்களில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement