• May 08 2026

பாலைவனத்தில் அனிதா சம்பத் கொடுத்த முத்தம்.. இந்த மொட்ட வெயிலில் இதெல்லாம் தேவையா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகையும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் தனது கணவருடன் துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் துபாய் நாட்டின் பாலைவனத்தில் செல்லும் போது தனது கணவருக்கு முத்தம் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். பாலைவனத்தில் மொட்டை வெயில் நேரத்தில் அனிதாவின் முத்தம் அவரது கணவருக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

சன் டிவி உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத். இவர் சில திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். குறிப்பாக ’காலா’ ’சர்க்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் கலந்து கொண்டு 84 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் அனிதா அவ்வப்போது தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அது மட்டுமின்றி அடிக்கடி சுற்றுலா செல்லும் அனிதா சம்பத் சுற்றுலா புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது கணவர் பிரபாவுடன் துபாய் நாட்டிற்கு சென்ற வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் துபாய் நாட்டில் பாலைவனத்தில் ரைடு செய்யும் வீடியோவும் அப்போது தனது கணவருக்காக முத்தம் கொடுக்கும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement