• Apr 01 2025

மேடம் இது என்ன சோதனை.. உக்கிரமாக டான்ஸ் ஆடிய சிம்ரன்.. வைரல் வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உக்கிரமாக டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ’மேடம் இது என்ன சோதனை’ என்பது உட்பட பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.  

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சிம்ரன் என்பதும் திருமணம் மற்றும் குழந்தை பேறுக்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார் என்பது தெரிந்ததே.

 கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சிம்ரன் தற்போதும் தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவரது நடிப்பில் தற்போது நான்கு தமிழ் படங்கள் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரனுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் தனது குடும்ப புகைப்படங்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் உக்கிரமாக ஒரு சாமி பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ’நம்ம தலைவி இஸ் பேக்’ ‘மேடம் இது என்ன சோதனை’  போன்ற கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த காஸ்டியூமும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மொத்தத்தில் சிம்ரன்  சிம்ரன் இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது.


Advertisement

Advertisement