• Jan 19 2025

ரஜினி போல் கமலும் அரசியலை விட்டு போயிடலாம்.. விஜய் ஓகே.. சீமான் பரபரப்பு பேட்டி..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 ரஜினிகாந்த் அரசியலை விட்டு ஒதுங்கியது போல் கமல்ஹாசனும் அரசியலை விட்டு ஒதுங்கி விடலாம், ஆனால் அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு ஓகே என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது அரசியல் கட்சி குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.  இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான்,  ’நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை நான்  வரவேற்கிறேன், எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றாலும் நான் அண்ணன், அவர் தம்பி, நாங்கள் இருவரும் ஒரே மண்ணின் பிள்ளைகள் ,ஒரே ரத்தம், அதுதான் தமிழ் ரத்தம். அதனால் எங்கள் இருவருக்கும் இனம் தெரியாத பாசம் உள்ளது’ என்று தெரிவித்தார்.  



’விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் படங்களில் நடித்துவது நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று சொன்னதை நான் வரவேற்கிறேன். ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றில் தலை நிமிர்ந்து நிமிருக்க முடியும். சினிமாவை விட்டுவிட்டு அவர் முழு நேர அரசியலுக்கு வந்தால் நான் கண்டிப்பாக அவரை வரவேற்பேன்.  எங்களுடைய கோட்பாட்டை விஜய் ஏற்றுக்கொள்வார் என்றால் நாங்கள் இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட எந்தவித பிரச்சனையும் இல்லை. அதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்..

2026ல் விஜய் அரசியலில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது, நான் அரசியல் களத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பேன். கூட்டணி குறித்து நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும், காலம்தான் அதை தீர்மானிக்கும்’ என்று தெரிவித்தார்.

’ஆனால் அதே நேரத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லை, விஜயை நான் நெகட்டிவ் லிஸ்டில் வைக்கவில்லை என்பதால் அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement