நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையை ’நீ எல்லாம் நடிப்புக்கு
லாயக்கில்லை, வேற ஏதாவது தொழில்
செய்து கொண்டு பிழைத்துக்கொள், நடிப்பு பக்கம் வராதே’ என்று திட்டியதாகவும் ஆனால் அதன் பிறகு அவருடைய
வளர்ச்சியை பார்த்து தன்னுடைய கணிப்பு தவறு, அவரை பற்றி அவ்வாறு
சொன்னது சொன்னதற்காக வருத்தப்படுகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு ஏற்கனவே சில படங்களில் குழந்தை
நட்சத்திரமாக நடித்திருந்தாலும் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான
’காதல் அழிவதில்லை’ என்ற படத்தின் மூலம்தான்
அவர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவருக்கு
ஜோடியாக நடித்த சார்மி கவுர் என்பவர் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே ஒரு
சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அறிமுகமான முதல் படம் இதுதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஒரு டான்ஸ் காட்சியின்
படப்பிடிப்பின்போது சிம்பு ஒரே டேக்கில் நடனமாடி
முடிக்க, ஆனா சார்மி கவுர்
பல டேக்குகள் எடுத்ததாகவும் இதனால் சிம்பு ஒரு கட்டத்தில் எரிச்சல்
அடைந்து ரிகர்சல் பார்த்துவிட்டு வந்திருக்கலாம் அல்லவா, ஏன் இப்படி உயிரை
வாங்குகிறாய், நீ எல்லாம் நடிக்கவில்லை
என்று யார் அழுதார்கள்? இனிமேல்
நீ நடிப்புத் துறைக்கு வராதே, வேறு ஏதாவது தொழில்
செஞ்சு பிழைத்துக் கொள்’ என்று திட்டியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு சார்மி
கவுர் தமிழ் மட்டும் இன்றி ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார் என்பதும் அதுமட்டுமின்றி அவர் கிட்டத்தட்ட பத்து
படங்களை தயாரித்து தெலுங்கு திரை உலகில் ஒரு
தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்த சிம்பு, அவரைப் பற்றி நான் முதல் படத்தில்
கணித்தது தவறு என்பதை இப்போது
உணர்கிறேன், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்
கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த பேட்டி குறித்து இதுவரை சார்மி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
என்றாலும் விரைவில் அவர் பதில் கூறுவார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!