தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். இவருடைய நடிப்பில் இறுதியாக இட்லி கடை படம் வெளியானது.
சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் காதலர் தினத்தில் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி கடும் வைரலானது.
அதற்கு காரணம், கடந்த ஆண்டு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த செல்ஃபி சமூக வலைதளத்தில் வெளியாகி பரவியதனால் உருவானது. அந்த போட்டோவில் இருவரும் நெருக்கமாக இருப்பதாக சிலர் தகவல் பரப்பினர்.

இதுகுறித்து, தனுஷுக்கு நெருக்கமான பாலிவுட் இயக்குநர் விளக்கம் அளித்தார். அதன்படி அவர் கூறுகையில், தனுஷ் இதுவரை இரண்டாவது திருமணம் செய்ய எந்த முடிவும் எடுக்கவில்லை; மகன்கள் யாத்ரா, லிங்கா அவருக்கு மிகவும் முக்கியம். மிருணால் தாக்கூருடன் தனுஷ் நல்ல நண்பர் மட்டுமே. அவர்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பது தவறான தகவல் என்றார்.
இந்த நிலையில், தனுஷ் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தனுஷ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து 3 படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஒவ்வொரு படத்திற்கும் 80 கோடி படி, மொத்தமாக 180 கோடி ரூபா தனுஷுக்கு சம்பளமாக வழங்கப்படுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக தனுஷ் உயர்ந்துள்ளார்.
எனவே இந்த மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் அவருக்கு முக்கிய இடத்தை உறுதி செய்யும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!