• Apr 26 2024

வெளியானது ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘விட்னஸ்’ படத்தின் ட்ரெய்லர்…4 மொழிகளில் வெளியாகிறதா!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சிரத்தா சிறீநாத் என்பவர் இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகக் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.


2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. 


மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.  2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.


இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விட்னஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


அரசியல் டிராமா ஜானரில் விட்னஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரோகினி, சுபத்ரா ராபர்ட், சண்முக ராஜா, அழகம் பெருமாள், ஜி. செல்வா, தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் தீபக்.


விட்னஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement