• May 04 2024

மணமகள் தோற்றத்தில் வெளியான ஹன்ஷிகாவின் முதல் புகைப்படம்... ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. இவர் ரசிகர்களால் 'சின்னக் குஷ்பூ' என சிறப்பாக அழைக்கப்பட்டு வருகின்றார். இவருக்கென்று தமிழ்நாட்டில் மாட்டுமல்லாது உலகம் பூராகவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


அத்தோடு விஜய், ஜெயம்ரவி, உதயநிதி, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். அந்தவகையில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜுலியட், வேலாயுதம், மாப்பிள்ளை' எனப் பல படங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் 'மகா'. இப்படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் இப்படம் ரிலீஸாகி இருந்தது.


இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை ஹன்சிகா திருமண செய்தி வந்தது. அந்தவகையில் சோஹைல் கதூரியா என்பவரை ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் பிரமாண்டமாக திருமணம் செய்ய இருக்கின்றார். 

சமீபத்தில் திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும்  சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது மணமகள் தோற்றத்தில் உள்ள நடிகை ஹன்சிகாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம லுக் எனக் கூறி அதிக லைக்ஸ் குவித்து வருவதோடு அதனை அதிகளவில் ஷேர் செய்தும் வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement