• Jan 19 2025

முழு கருங்கல்லால் ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் சிலை..! எத்தனை கிலோ எடை தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் தனது 74 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவர் தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர். இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் பலரும் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை ஒன்றை ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஸ்தாபித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன.

d_i_a

அதாவது ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கல்யத்தில் உள்ள ரஜினி கோவிலில் இந்த சிலையை ஸ்தாபித்துள்ளார். அதன் பின்பு வைக்கப்பட்ட ரஜினி சிலைக்கு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றுள்ளன.


இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பல இடங்களில் உள்ள ரசிகர்கள் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு பல பிரபலங்களும் வாழ்த்தி வருகிறார்கள்.


Advertisement

Advertisement