இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டு அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வழங்கி இருக்கிறார். இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட் பக்கத்தில் ஷேர் செய்து நாங்கள் மீண்டும் இணைக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநர் செல்வராகவன் முன்பு இயக்கி கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தனுஷின் மயக்கம் என்ன ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் செல்வராகவனின் புதிய படத்தில் இணையவுள்ளதாக ஏற்கனவே ஒரு புகைப்படத்துடன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த அறிவிப்பாக வண்ணத்துப்பூச்சி போட்ட ஒரு புகைப்படத்தினை ஷேர் செய்த செல்வராகவன் பெருமையுடன் வழங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் 3வது முறையாக இணைக்கிறோம், அதிகார பூர்வமான அறிவிப்பு நாளை 6:30க்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
d_i_a
இது இவர்கள் இணைந்த அடுத்த திரைப்படத்தின் அப்டேட்களாக இருக்கலாம் என நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் கடைசியாக அமரன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவரின் இசையில் வெளியாகிய பாடல்கள் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில படங்களில் இவர் கமிட்டாகி இருக்கும் நிலையில் தற்போது வெளியான போஸ்ட் வைரலாகி வருகிறது.
The genius filmmaker’s next announcing tomm . A @selvaraghavan film …… doing music again for him after #aayirathiloruvan and #mayakkamenna for the third time . pic.twitter.com/C2lKpotpRj
— G.V.Prakash Kumar (@gvprakash) December 12, 2024
PRESENTING PROUDLY 🤓🤓 pic.twitter.com/7BKYtwOOJH
— selvaraghavan (@selvaraghavan) December 12, 2024
Listen News!