விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் மேனேஜர் வித் வர்க்கஸ் டாஸ்க் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நேற்று சவுந்தர்யா நடந்து கொண்ட விதத்தை சுட்டி காட்டி தொழிலாளர்கள் திட்டுகின்றார்கள். இதனால் சவுந்தர்யா அழுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு மேனேஜர் வித் வர்க்கஸ் டாஸ்க் வழங்கபட்டது. அதில் ஒரு குழுவினர் முதலாளிகளாகவும் மற்ற குழுவினர் தொழிலாளிகளாகவும் டாஸ் செய்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழையில் அன்ஷித்தா நனைந்து கொண்டு இருக்க சவுந்தர்யா அப்படி செய்ய கூடாது என குடையை பிடித்து அவரை தடுப்பார்.
இதனால் அங்கு பிரச்சினை எழுகிறது. வர்க்கஸ் மீது கை வைத்து விட்டார்கள் என போராட்டம் எழுகிறது. மழை வந்தா பார்க்க கூடாதுனு எந்த ரூலஸும் இல்ல, உங்களுக்கு 2 முறை வோர்னிங் வந்து இருக்கு என்று குற்றம் சுமத்தப்படுகிறது இதனால் சவுந்தர்யா அழுதுகொண்டே மஞ்சுரியிடம் சொல்கிறார் எனக்கு டாஸ்க் எப்படி விளையாடனும் என்று தெரியவில்லை என்று சொல்கிறார். சவுந்தர்யாவுக்கு மஞ்சூரி ஆறுதல் கூறுவதுடன் ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!