• Jan 19 2025

ஷங்கரின் பிரம்மாண்டமும் ராம் சரணின் துடிதுடிப்பும்.. வெளியானது மாஸ் அப்டேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் அரசியல் கதையாக உருவாக்கியுள்ளதாம். தற்போது இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகின்றது.

பிரம்மாண்ட இயக்குனராக காணப்படும் ஷங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இந்த படம் தோல்வி அடைந்தது.

இதனால் அந்த படத்தில் காணப்பட்ட குறைகளை எல்லாம் நீக்கி இதனை பிரம்மாண்ட கமர்சியல் படமாக தயாரித்து வருகின்றார் சங்கர்.  மேலும் இந்த படத்தில் எஸ். ஜே சூர்யா, கியாரா அத்வானி மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

d_i_a

ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அதன் பின்பு டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் மூன்றாவது பாடல் நவம்பர் 28ஆம் தேதி வெளியிட உள்ளதாக இதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement