• Jan 19 2025

சாய்ரா பானு திடீரென வெளியிட்ட ஆடியோ.. ARR விவாகரத்துக்கு முக்கிய காரணம் இதுதானா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப நாட்களாகவே ஏ.ஆர் ரகுமானின் விவாகரத்து பற்றிய தகவல்கள் தான் ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றது. ஏ.ஆர் ரகுமானின் மனைவி சாய்ராபானு அவரை விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாகவே அறிவித்திருந்தார். இதனை உறுதி செய்யும் வகையில் ஏ. ஆர் ரகுமானும்  தங்களுக்கு பிரைவேசி வேணும் என்று சொல்லி பதிவிட்டு இருந்தார்.

கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஏ. ஆர் ரகுமான் இன்னும் சில நாட்களில் முப்பதாவது திருமண ஆண்டை  பிரம்மாண்டமாக கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்பாராத விதத்தில் இவர்களுடைய விவாகரத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ஏ. ஆர் ரகுமான் விவாகரத்தை அறிவித்த ஒரு சில மணி நேரத்திலேயே அவருடைய இசை குழுவில் காணப்பட்ட இசைக் கலைஞர் மோகினி தே  தானும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

d_i_a

இந்த நிலையில், ஏ. ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா ஆடியோ ஒன்றை வெளியிட்டு தான் ஏன் ஏ. ஆர் ரகுமானை பிரிகின்றேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், நான் தற்போது மும்பையில் வசித்து வருகின்றேன். எனக்கு இரண்டு மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை. மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்காக மும்பையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாகவே ஏ. ஆர் ரகுமானை பிரிவதாகவே அறிவித்தேன்.


அனைத்து youtube களுக்கும் தமிழ் மீடியாக்களுக்கும் ஒரே ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இந்த உலகத்தில் ஒரு சிறந்த மனிதர் அது ஏ. ஆர் ரகுமான். எனது உடல்நிலை காரணமாகத்தான் அவரை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளேன். 

அவர் சென்னையில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றார். எனது உடல்நிலை காரணமாக அவருக்கு எந்த வித பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரை விட்டு பிரிகின்றேன். ஏ. ஆர் ரகுமான் ஒரு அற்புதமான மனிதர். அனைவருக்கும் நான் வைத்துக் கொள்ளும் கோரிக்கை ஒன்றுதான். 

அவர் தொடர்பில் எந்த அவதூறும் பரப்ப வேண்டாம். நான் அவரை அந்த அளவுக்கு காதலிக்கின்றேன். அவரை நம்புகின்றேன் என்பது எனக்கும் அவருக்கும் தெரியும் என்று உருக்கமாக அந்த  ஆடியோவில் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement