ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை ஹாலிவுட் தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாகவும் இந்திய சினிமாவின் ஒரு புதிய மைல்கல்லாக இந்த படம் அமையும் என்றும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’இந்தியன் 2’திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ராம்சரண் நடிப்பில் உருவான ’கேம் சேஞ்சர்’ படமும் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு இருப்பதாகவும் ’இந்தியன் 2’ ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த படம் குறித்து மனம் திறந்து உள்ளார். எனது அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கிறேன், ஒன்று வரலாற்று திரைப்படம், மற்றொன்று ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் திரைப்படம், இன்னொன்று சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்று கூறியுள்ளார்.
இந்த மூன்றில் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக இருப்பதால் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த படத்தில் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்படாத புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்ய இருக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.
எனவே ஷங்கர் அடுத்த படம் ஜேம்ஸ்பாண்ட் படமாக இருந்தால் அந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் வேற லெவல் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!