• Feb 05 2026

அதிலும் சாதனை இதிலும் சாதனை... ஓடிடியில் சாதனை படைத்த ஷாரூக்கானின் 'ஜவான்'...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை பெற்றது.


இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்  ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் தியேட்டரில் எவ்வளவு வரவேற்க்கப்பட்டதோ அதே போல ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.  


இது குறித்து ஓடிடி நிறுவனம், “அனைத்து மொழிகளிலும் வெளியான இரண்டே வாரங்களில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படம் 'ஜவான்',” என அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் வெளிவந்த படங்களில் 1000 குவித்த ஒரே படம் 'ஜவான்' மட்டுமே. தியேட்டர்களில் வசூல் சாதனை, ஓடிடியிலும் சாதனை  படைத்தம் படம் என்ற பெயரை ஜவான் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement