• Mar 08 2026

ஜிம் பாய்ஸுடன் கெத்தாக காரில் வந்திறங்கிய ஷபானா.. எங்கு தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஷபானா ஷாஜகான், தமிழ் சின்னத்திரையில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்றவர். ‘செம்பருத்தி’ சீரியலில் அவர் ஏற்று நடித்த ‘பார்வதி’ கதாபாத்திரம், தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அவரை பிரபலமாக்கியது.  

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘செம்பருத்தி’ தொடர் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஷபானா மனம் திறந்து பேசி இருந்தார்.

சுமார் ஐந்து ஆண்டுகள் ஒரே கதாபாத்திரமாக வாழ்ந்ததால், அந்தத் தொடர் முடிந்த பிறகு மன ரீதியான சவால்களை எதிர்கொண்டதாகவும் ஷபானா கூறியுள்ளார். 

ஆரம்பத்தில் அதிலிருந்து வெளியில் வருவது சிரமமாக இருந்தாலும், தற்போது அதனை தாண்டி தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


‘செம்பருத்தி’க்கு பிறகு ‘Mr. மனைவி’ தொடரிலும் நடித்த ஷபானா, சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, தனது கலகலப்பான மறுபக்கத்தையும் ரசிகர்களுக்கு காட்டினார். 

இந்த நிலையில், நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு காரில் வந்து கெத்தாக இறங்கியுள்ளார் ஷபானா. தற்போது அவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement