கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம், பத்து தல உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘டிமான்டி காலனி 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இப்படம் ஏப்ரல் மாதம், தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிரியா பவானி சங்கர் மீண்டும் ஒரு வெற்றிகரமான ரவுண்டு வருவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அவரது காதலர் ராஜவேல், பிரியா பவானி சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளை எழுப்பி வருகிறது.
Listen News!