சியான் விக்ரம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த படம் தான் ‘வீர தீர சூரன்’. 'சித்தா' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு சில பிரச்சனைகளின் மத்தியில் கடந்த 27 ஆம் திகதி காலை வெளியாக இருந்து பின்னர் மாலை வெளியாகியது. படம் திரைக்கு வந்து 3 நாளுக்குள் 5.5 கோடி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினை ஈடுகட்டுவதற்கு பி 4 நிறுவனம் 7 கோடி தொகை கேட்டுள்ளது. இதனால் தான் படத்தினை கூறிய நேரத்துக்குள் வெளியிட முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர்கள் அரைவாசி தொகையாக மூன்று கோடியை தருமாறு குறித்த நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தற்போது 1 கோடி மாத்திரம் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் தன்னிடம் இருந்த 2.5 கோடி பணத்தொகையை கொடுத்து பட வெளியீட்டிற்கு உதவியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பிரச்சினையை தீர்த்து பட வெளியீட்டிற்கு உதவியதாக தெரியவந்துள்ளது.
Listen News!