நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற 'லவ் டுடே' படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாறியவர். தனது இரண்டாவது திரைப்படமான 'டிராகன்' மூலம் அவர் மேலும் வெற்றியடைந்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை புரிந்துள்ளது.
இந்த படம் 10 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்தது மேலும் இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, மற்றும் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன்,ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். குறிப்பாக கயாடு லோகர் இப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை பிடித்துள்ளார்.
'டிராகன்' திரைப்படம் தனது 1 ஆண்டு பயணத்தை முடித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது ட்விட்டர் தளத்தில் 1 நிமிட வீடியோ மூலம் அந்த பயணத்தை பகிர்ந்துள்ளார். வீடியோவில் படத்தின் வெற்றியை கொண்டாடும் தருணங்களும் ரசிகர்களின் ஆதரவும் பகிரப்பட்டுள்ளன. வீடியோ இதோ ...
1 year journey as Dragon Director in 1 minute ! ❤️🔥
Thank you 🤗@pradeeponelife @archanakalpathi @aishkalpathi @Ags_production ♥️#Dragon pic.twitter.com/B03kRc2WRk
Listen News!