தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா சிவகார்த்திகேயன் நடிக்கும் "பராசக்தி " படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் தற்போது பாலிவுட் நடிகரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் புதிய பரபரப்பான புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. கார்த்திக் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீலீலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் "நீ தான் என் உயிர்" என்று ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார் இதனால் அவர்களது நட்பு மற்றும் நெருக்கமான உறவு குறித்து பல வாக்குமூலங்கள் எழுந்துள்ளன.
இந்த புகைப்படம் படத்தின் ஒரு காட்சி அல்லது அவர்கள் இருவரும் காதலின் உறவைவெளிப்படுத்துகிறார்களா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே பரவிவருகின்றன. தற்போது படக்குழு மற்றும் நடிகர்கள் எந்தவொரு அதிகாரபூர்வமான விளக்கமும் அளிக்கவில்லை இது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!