தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் எனப் புகழ்பெற்ற நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் இன்று காலமானார்.
உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் பணியாற்றிய பாக்கியராஜ், பின்னர் நடிகராகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை நகைச்சுவை, உணர்வு மற்றும் யதார்த்தத்துடன் இணைத்து சொல்லும் அவரது தனித்துவமான திரைக்கதை நடைமுறை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகள் இல்லாமல், எளிமையான கதைக்களங்களிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என கே. பாக்கியராஜ் பெரிதும் அறியப்பட்டார்.
அவரது படைப்புகள் இன்று வரை பல இளம் இயக்குநர்களுக்கு திரைக்கதை பாடமாகவே இருந்து வருகின்றன.
சமீபத்தில் அவர் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், உடல்நிலை காரணமாக சிகிச்சையில் இருந்தார்.
ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட போதும், மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் இறுதியில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத பல படைப்புகளை வழங்கிய ஒரு சிறந்த கலைஞரை இழந்தது திரையுலகை மட்டுமல்லாது ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!