தமிழ் சினிமாவில் மகா நடிகை, நடிகையர் திலகம் என பெயர் எடுத்த நடிகைதான் சாவித்திரி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த சாவித்திரிக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பு மேல் அதிக ஆர்வம் காணப்பட்டது. இதனாலையே தனது விடாமுயற்சியால் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த போது ஜெமினி நிறுவனம் படப்பிடிப்புக்காக நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தபோது சாவித்திரியும் அதில் கலந்து கொண்டார். ஆனால் யார் உன்னை நடிக்க அழைத்தது என்று அவரை உள்ளே விடாமல் வெளியே விரட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தேவதாஸ், மனம் போல் மாங்கல்யம், மிஸ்ஸியம்மா, வஞ்சம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதன்பின் நடிகர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் , ஜெமினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.
எந்த ஜெமினி நிறுவனம் தன்னை வெளியே போக சொல்லி அனுப்பியதோ அந்த ஜெமினி நிறுவனத்தின் உரிமையாளரான ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவரை காதலித்து திருமணம் செய்தார்.
எனினும் புகழின் உச்சியிலே இருந்த சாவித்திரி சில துரோகங்களாலும் பேராசையினாலும் தன்னுடைய சுயமரியாதை இழந்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஜெமினி கணேசன் மகள் கமலா கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், சாவித்திரி ஒரு ராத்திரி கொட்டுற மழையில எங்க வீட்டுக்கு வந்தபோது அவர் கெட்டுப்போக கூடாது என்று தாலி கட்டி ஒரு அந்தஸ்து கொடுத்தார்.
அவளுக்கு தமிழே பேசத் தெரியாது. கையெழுத்து போட கத்து கொடுத்து, கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து, கௌரவமா வாழ வச்சார். ஆனா அவ கல்யாணமாகி இரண்டு பசங்க இருக்கென்று தெரிஞ்சும் அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணினா. அத்தோட எங்க அப்பாவ பிளாக்மெயில் பண்ணி கிட்டத்தட்ட 15 வருஷம் எங்க வீட்டுக்கே வர விடாம பண்ணினா.. எங்க குடும்பத்தையே கலைச்சவ சாவித்திரி என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Listen News!